தருமபுரி: பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் காலை 8 மணி நிலவரப்படி 28 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உயர்ந்தது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஆற்றில் இறங்க, அருவியல் குளிக்க தடைவிதித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் நீர்வரத்து அதிகரித்து வருவதால் படகுகளை இயக்கவும் படகு சவாரி செய்யவும் மறு உத்தரவு வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்ராம்பளையம் மற்றும் காவிரி கரையோர பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கோடை விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லுக்கு சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இதையும் படிங்க: செல்ஃபி எடுத்தபோது ஒகேனக்கல் ஆற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு!