அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தருமபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியை அமைப்பு ரீதியாக கிழக்கு, மேற்கு மாவட்டங்களாகப் பிரித்து கிழக்கு மாவட்ட செயலாளராக முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பனை நியமித்துள்ளார்.
அரூர், பாப்பிரெட்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளடக்கிய பகுதிகள் கிழக்கு மாவட்டமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேற்கு மாவட்டமாக தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு சட்டப்பேரவைத் தொகுதிகள் பிரிக்கப்பட்டு அதற்கு மாவட்ட செயலாளராக டி. ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பழனியப்பன் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ‘உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தோல்விக்கு நாங்கள்தான் காரணம்’ - அமமுக மா.செ. பேச்சு