ETV Bharat / state

தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட கரோனா!

தருமபுரி: நாடகங்களில் ராஜா வேடம் போட்டு மக்களுக்குப் பொன்னையும் பொருளையும் அள்ளி வழங்கும் அரிதாரம் பூசிய இந்த ராஜாக்கள், இன்று தமிழ்நாடு அரசின் நிதி உதவியை கேட்டு கையேந்தி நிற்கும் அவலநிலையில் உள்ளனர்.

dharmapuri
dharmapuri
author img

By

Published : May 27, 2020, 1:30 PM IST

Updated : May 27, 2020, 4:59 PM IST

தெருக்கூத்து கிராமப் பகுதிகளில் நடத்தப்படும் ஒரு பாரம்பரிய கலையாகும். இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது மக்களிடம் விடுதலை உணர்வை கொண்டுசெல்ல முக்கியப் பங்காற்றியது, தெருக்கூத்துதான்.

தருமபுரி மாவட்டத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட குழுக்களில் ஐந்தாயிரம் தெருக்கூத்து நாடக கலைஞர்கள் உள்ளனர். புராண கதைகளை நாடகம் வடிவில் மக்களிடம் கொண்டுசெல்லும் இவர்கள், வண்ண வண்ணமாய் அரிதாரம் பூசிக்கொண்டிருந்தாலும், இவர்களின் வாழ்க்கை என்னவோ இருண்டுதான் கிடக்கிறது.

தெருக்கூத்து நாடகக் கலைஞர்கள்
தெருக்கூத்து நாடகக் கலைஞர்கள்

ஒருநாள் இரவு முழுவதும் கண்விழித்து கூத்து நடத்தினால் 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை மட்டுமே இவர்களுக்கு வருமானமாக கிடைக்கும். இதை வைத்துதான் இவர்கள் தங்கள் குடும்பத்தை நடத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.

இப்படி, ஏற்கனவே வேலைவாய்ப்பு குறைந்து பாதிக்கப்பட்டுள்ள நாடகக் கலைஞர்களின் வாழ்க்கையை, கரோனா ஊரடங்கு இன்னும் கேள்விக்குறியாக்கியுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக வருமானம் இல்லாமல் இவர்கள் தவிக்கின்றனர்.

தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட கரோனா

நவம்பர் மாதம் தொடங்கி மே மாதம் வரை கோடை காலங்களில் மட்டுமே இவர்களால் கூத்து நடத்த முடியும். இந்த ஏழு மாதங்களில் வரக்கூடிய வருவாயை வைத்துக்கொண்டுதான், வருடம் முழுவதையும் இவர்கள் சமாளிக்கின்றனர்.

நல வாரியம் மூலம் ஒரு சில நாடக கலைஞர்களுக்கு மட்டுமே தமிழ்நாடு அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய் உதவி கிடைத்துள்ளது. உறுப்பினராக இல்லாத நாடக கலைஞர்களுக்கும் அரசு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று இவர்கள் அரசுக்கு வேண்டுகோள்விடுக்கின்றனர்.

கையில் பணமில்லாமல் தவிக்கும் அரிதார ராஜாக்கள்

வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் தெருக்கூத்து கலைஞர்களுக்கு அரசின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வழங்கி, தங்கள் வருவாய்க்கு வழிவகை செய்ய வேண்டும் என்பது தெருக்கூத்து நாடக கலைஞர்களின் கோரிக்கையாக உள்ளது.

அரசு ஊரடங்கு உத்தரவை விலக்கிக்கொண்டால்கூட கோயில் திருவிழாக்கள் நடந்து, அங்கு தெருக்கூத்து நடைபெற்றால் மட்டுமே கூத்துக் கலைஞர்களுக்கு வருவாய்க்கு வழி கிடைக்கும்.

நாடகங்களில் ராஜா வேடம் போட்டு மக்களுக்குப் பொன்னையும் பொருளையும் அள்ளி வழங்கும் அரிதாரம் பூசிய இந்த ராஜாக்கள், இன்று தமிழ்நாடு அரசின் நிதி உதவியைக் கேட்டு கையேந்தி நிற்கும் அவலநிலையில் உள்ளனர்.

இதையும் படிங்க:’வருமானமின்றித் தவிக்கிறோம்’ - அம்மிக்கல் தொழிலை புரட்டிப்போட்ட ஊரடங்கு

Last Updated : May 27, 2020, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.