தருமபுரி: தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த கெட்டுப்பட்டி கிராமத்தில் 24 மணி நேரமும் டாஸ்மாக் மது பானங்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
காவல் துறையினர் பொதுமக்களின் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமாரிடம் இதுதொடர்பாக புகார் அளித்தனர்.
இதைத்தொடர்ந்து, இன்று கெட்டுப்பட்டி கிராமத்தில் மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்யும் சௌந்தர்யா என்ற பெண்ணின் வீட்டிற்கு அவர் சென்று பார்வையிட்டார்.
வீட்டில் மெத்தை, பீரோ, குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்டவற்றில் மதுபாட்டில்கள் குவியல், குவியலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.
இதன்பின்பு, சௌந்தர்யாவின் வீட்டிற்கு வந்த காவல்துறையினர், வீட்டில் இருந்த 177 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: ’ஆட்சி மாறினால் ஒகேனக்கல் சர்வதேச சுற்றுலாத்தளம்’ - திமுக எம்பி. உறுதி