ETV Bharat / state

கருத்து மோதலில் ஈடுபட்ட பாஜககாரருக்கு உதவிய திமுக எம்.பி - குவியும் பாராட்டு

தருமபுரி: திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், பாஜககாரருக்கு உதவிய சம்பவம் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

author img

By

Published : Mar 6, 2020, 8:00 PM IST

தருமபுரி எம்.பி தான் மாஸ் ட்விட் தருமபுரி எம்.பி செந்தில்குமார் எம்.பி செந்தில்குமார் ட்விட் Dharmapuri MP Mass Tweet Dharmapuri MP Senthilkumar MP Senthilkumar Tweet
Dharmapuri MP Senthilkumar

தருமபுரி மக்களவை உறுப்பினா் செந்தில்குமார் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தருமபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவர் தேர்தலுக்கு முன்பிருந்தே சமூக வலைதளப் பக்கத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

அதன் அடுத்த கட்டமாக ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் மக்களின் குறைகளைக் கேட்டுத் தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து வருகிறார். தருமபுரி மட்டுமில்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் மருத்துவ உதவி கேட்டு பலரும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டனர்.

அத்தகைய பதிவுகளை ஆராய்ந்து மருத்துவ உதவிகளை செய்து வருகிறார். இதுவரை 20-க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ உதவிகளை செய்துள்ளார். அதே போல், ஏழை விளையாட்டு வீரர்கள் வெளிநாடு சென்று விளையாட வசதி இல்லாதவர்களுக்கு நிதி பெற்று தந்து, அவர்கள் விளையாட்டில் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், பாஜகவைச் சேர்ந்த எஸ்.ஜி சூர்யா என்பவர், தனது உறவினர் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இப்பதிவைக் கண்ட அவர் பிரதம மந்திரியின் தேசிய நிவாரண நிதியின் கீழ், சிகிச்சைக்கு உதவுவதாகத் தெரிவித்திருந்தார்.

தருமபுரி எம்.பி தான் மாஸ் ட்விட் தருமபுரி எம்.பி செந்தில்குமார் எம்.பி செந்தில்குமார் ட்விட் Dharmapuri MP Mass Tweet Dharmapuri MP Senthilkumar MP Senthilkumar Tweet
ட்டிவிட்டர் பதிவு

முன்னதாக செந்தில்குமாருடன், எஸ்.ஜி சூர்யா சமூக வலைதளத்தில் பல முறை கருத்துச் சண்டை போட்டுள்ளார். ஆனால், அதை அவர் மனதில் வைத்துக் கொள்ளாமல் அவரின் உறவினருக்கு உதவிக்கரம் நீட்டிய செயல்பாடு பலராலும் பாராட்டப்படுகிறது. இதற்கு தருமபுரி இளைஞர்கள் 'எங்க ஊரு எம்.பி. செந்தில்குமார் தான் மாஸ்’ என சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனா்.

இதையும் படிங்க:ஆவடி அருகே 500 கிலோ செம்மரக் கட்டைகள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.