ETV Bharat / state

தொடர் விடுமுறையால் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

author img

By

Published : Dec 27, 2020, 3:33 PM IST

வைகுண்ட ஏகாதேசி, கிறிஸ்துமஸ் தினங்களையொட்டி, தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் அருவிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

ஒகேனக்கல் அருவி
ஒகேனக்கல் அருவி

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலாத் தளத்தில் வைகுண்ட ஏகாதேசி, கிறிஸ்துமஸ், ஞாயிற்றுக்கிழமை எனத் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்கள் மட்டுமல்லாது, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் அருவிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இன்று (டிச.27) காலை முதலே சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கியதால் அப்பகுதி முழுவதும் களைகட்டியது. தங்களது குடும்பத்தினருடன் வந்த சுற்றுலாப் பணிகள், அருவியில் குளித்தும், பரிசலில் சென்று ஐந்தருவி, சீனி அருவி ஆகியவற்றைப் பார்த்து ரசித்தும் மகிழ்ந்தனர்.

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

தற்போது ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு 15 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகள் மெயின் அருவிக்கு செல்லும் வழியில் குறைந்த அளவு தண்ணீர் செல்வதால், அப்பகுதியில் குளிப்பவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

இதையும் படிங்க: புதுவையில் உள்ளாட்சித் தேர்தல் தாமதமாவதற்கு யார் காரணம்? கிரண்பேடி Vs நாராயணசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.