ETV Bharat / state

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..உதவி பேராசிரியர் வேறு துறைக்கு மாற்றம் - தர்மபுரி

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட உதவி பேராசிரியர் குழந்தைகள் நலப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவி பேராசிரியர்

author img

By

Published : Sep 13, 2022, 12:44 PM IST

தர்மபுரி: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சட்டம் சார்ந்த துறையில் பணியாற்றி வருபவர் சதீஷ்குமார். இவர் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடுவதாக மாணவிகளிடம் இருந்து மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதவள்ளிக்கு புகார் வந்தது.

அதன் அடிப்படையில் மருத்துவக்கல்லூரி முதல்வர் மூன்று மருத்துவர்கள் அடங்கிய விசாரணை குழுவை அமைத்துள்ளார். விசாரணைக் குழுவில் மருத்துவர் கண்மணி கார்த்திகேயன், தண்டர் சீப், சாந்தி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் மாணவிகளிடமும் குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் சதீஷ்குமாரிடமும் விசாரணை செய்துள்ளனர்.

விசாரணையின் அடிப்படையில் சதீஷ்குமார் சட்டம் சார்ந்த பிரிவில் இருந்து குழந்தைகள் நலப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் பேராசிரியர் சதீஷ்குமார் இளம் பெண் ஒருவருடன் தனிமையில் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

இதையும் படிங்க: பென்னாகரம் அருகே பெட்ரோல் ஊற்றி இளைஞர் கொலை;எஸ்.பி. நேரில் ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.