நாளை மறுநாள் (அக். 25) ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு தரிமபுரி பூக்கள் சந்தைக்கு சாமந்தி பூ வரத்து அதிகரித்தது. மாவட்டத்தில் பாலக்கோடு, பென்னாகரம், கம்பைநல்லூர், அரூர் ஆகிய பகுதிகளில் சாமந்தி பூ சாகுபடி செய்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் சாகுபடி செய்த சாமந்திப் பூக்களை தர்மபுரி பூக்கள் சந்தைக்கு இன்று (அக். 23) விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
பூக்களின் விலை நேற்றைய விலையைவிட கிலோவுக்கு 40 ரூபாய் அதிகரித்து சாமந்தி பூ கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையானது. இதையடுத்து சம்பங்கி பூ கிலோ 200 ரூபாய், பட்டன் ரோஸ் கிலோ 120 ரூபாய், 20 ரோஜா கொண்ட ஒரு கட்டு 80 ரூபாய், அரலி ஒரு கிலோ 300 ரூபாய், மல்லிகை கிலோ 500 ரூபாய், கனகாம்பரம் கிலோ 500 ரூபாய், குண்டுமல்லி கிலோ 1000 ரூபாய், கோழிக்கொண்டை ஒரு சென்டு 50 ரூபாய், செண்டுமல்லி ஜூலை 30 ரூபாய்க்கும் விலை உயர்ந்து விற்பனையானது.
பூக்களின் விலை குறைந்த அளவே உயர்ந்ததால் தாங்கள் எதிர்பார்த்த விலை உயர்வு இல்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க... முன்பனிக்காலத்தை வரவேற்கும் பூக்கள் - மஞ்சள் மயமான கொடைக்கானல்!