தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாகியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன் படி தினந்தோறும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு ஊரடங்கு என அறிவித்துள்ளது.
அதன்படி ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஏப்ரல்25) முழு ஊரடங்கு என்பதால் தர்மபுரி மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வணிக நிறுவனங்கள், முக்கிய வீதிகள், சாலைகள், பேருந்து நிலையம் ஆகியவை பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மேலும் அத்தியாவசியமான மருந்தகம் உள்ளிட்டவை மட்டும் திறந்திருக்கிறது. அதுபோல டீக்கடை மற்றும் உணவகங்களில் பார்சல்களே வழங்கப்படுகின்றன.
பொதுமுடக்கத்தால் தர்மபுரி நகரப்பகுதி சாலைகளில் கிருமி நாசினியை தெளிக்கும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.
குறிப்பாக முழு ஊரடங்கை கடைப்பிடிக்காமல், வெளியில் சுற்றி திரியும் வாகனங்களை காவல் துறையினர் தணிக்கை செய்து எச்சரிக்கை விடுத்து அனுப்பினர்.