கரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியில் உள்ள இளைஞர்கள், பொது மக்களிடையே பல்வேறு வழிகளில் கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். காவல் துறையினருடன் இணைந்து கரோனா வைரஸ் போன்று உருவபொம்மையை இளைஞா்கள் தயார் செய்து பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களான அரூர் காவல் நிலையம், ரவுண்டானா, நால்ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் வைத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
உருவ பொம்மையில் தலைப்பகுதியில் கரோனா வைரஸ் வடிவம் அமைத்து, முகக் கவசம் அணிவித்தும் பொம்மை மீது ”விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு” என்ற வாசகங்கள் எழுதியுள்ளனர். மேலும் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக தருமபுரி மாவட்டத்தை உருவாக்கிட பொதுமக்கள் ஒத்துழைத்து, அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல், அரசு மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: முகக்கவசம் அணியவில்லையெனில் அபராதம்: நெல்லை மாவட்ட நிர்வாகம்