தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் மூன்று பணியாளர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஊராட்சி அலுவலகம் தூய்மைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
மேலும் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவல் நிலையத்தில் பணிபுரியும் மூன்று காவலர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால், ஒகேனக்கல் காவல் நிலையம் மூடப்பட்டு, தூய்மைப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து காவல் நிலையத்தை சுத்தம் செய்து வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் தற்போது கிராமப்புறங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.