தருமபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்புக்காக அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளை மேற்கு மண்டல ஐஜி பெரியய்யா ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவர் சேலம் மாவட்ட எல்லையான தொப்பூா், தருமபுரி நான்கு ரோடு சந்திப்பு உள்ளிட்ட பகுதியில் ஆய்வு செய்தார்.
அப்போது பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கு முகக்கவசம், கையுறை, கிருமி நாசினி போன்றவை வழங்கி பாதுகாப்புடன் விழிப்புணர்வாக சோதனைகளை மேற்கொள்ள வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.
இதைத் தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த ஊர்க்காவல் படை வீரர்களுக்கு வெகுமதி வழங்கினார். இந்த ஆய்வில் சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: பரமக்குடியில் பள்ளி மாணவனுக்கு கரோனா பாதிப்பு- 15ஆக உயர்ந்த பாதிப்பு