தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த மேல் பூரிகல் பகுதியில் உள்ள நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமானதாக இல்லை என அப்பகுதி வாசிகள் தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் (பாமக) வெங்கடேஸ்வரனிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து வெங்கடேஸ்வரன் இன்று (ஜூன்.9) மேல் பூரிகலில் உள்ள நியாயவிலை கடைகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுக்கு பின் மாவட்ட அலுவலர்களை தொடர்பு கொண்டு தரமான அரிசி வழங்குமாறு அறிவுறுத்தினார். மேல் பூரிகல் பகுதியில் ஜூன்.12 ஆம் தேதி முதல் நல்ல அரிசி் வழங்குவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.