தர்மபுரி : தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார்மயமாக்கப்படுவதைக் கண்டித்தும், போனஸ் வழங்கக் கோரி வலியுறுத்தியும் தர்மபுரி மாவட்ட பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் நேற்று (நவ.11) மாலை ஆர்பாட்டம் நடைபெற்றது.
மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்திற்கு பட்டாளி தொழிற்சங்கத் தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.
இந்நிலையில், மாவட்டத்தில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை மீறி அனுமதியின்றி இந்த ஆா்பாட்டம் நடத்தப்பட்டதாகக் கூறி, 94 ஆண்கள், ஆறு பெண்கள் உள்பட 100 பேர் மீது தர்மபுரி நகரக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற கிராம உதவியாளர்கள்