தருமபுரி மாவட்டம் மிட்டாநூல அள்ளி கிராமத்தில் மல்லிகேஸ்வரர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்குச் சொந்தமான காளை ஒன்று உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தது. இதனையடுத்து கோயில் காளையை கிராம மக்கள் ஒன்று சேர்ந்து அடக்கம் செய்ய முடிவு செய்தனா்.
அதன்படி, மனிதருக்கு இறுதி ஊர்வலம் நடைபெறுவதுபோல் காளையை தாரை தப்பட்டைகளுடன் ஊர்வலமாக சுமந்து சென்று, சடங்கு, சம்பிரதாயங்கள் செய்தபின் அடக்கம் செய்தனர்.
கோயில் காளை உயிரிழந்ததால் ஒட்டுமொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்தக் காளை பல்வேறு போட்டிகளில் பங்குபெற்று ஏராளமான பரிசுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிராமத்தை சோகத்தில் ஆழ்த்திய காளையின் மரண செய்தி!