ETV Bharat / state

மலை கிராமத்தில் நடைபெற்ற எருதுவிடும் திருவிழா.!

தருமபுரி: கோட்டூர் மலை கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி எருதுவிடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட காளைகள், பட்டி மாடுகள் பங்கேற்றன.

buffalo festival held in the hill village of pennagaram
கோட்டூா் மலை கிராமத்தில் நடைபெற்ற எருதுவிடும் திருவிழா
author img

By

Published : Jan 23, 2020, 8:37 PM IST

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட வட்டுவனஹள்ளி ஊராட்சியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் கோட்டூர், அலக்கட்டு, ஏரிமலை ஆகிய மூன்று மலை கிராமங்கள் உள்ளன.

கோட்டூர் மலையில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடிநீர், சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத இந்த கிராம மக்கள், மலைமீது விவசாய தொழில் செய்து வருகின்றனர்.

இங்குள்ள மக்கள் விவசாய பணிகளுக்காக நாட்டு மாடுகளை வளர்த்து வருகின்றனர். மலை கிராமத்தில் ஆண்டுதோறும் தை பொங்கல் முடிந்து அடுத்து வருகின்ற வியாழக் கிழமையில் அதிகாலை கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயிலில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தாங்கள் வைத்திருக்கும் மாடுகளை அலங்கரித்து கிராமத்தின் மந்தை வீதிகளில் பாரம்பரிய முறைப்படி எருது விடும் திருவிழா நடத்துவது வழக்கம். கடந்த வாரம் பொங்கல் முடிந்த நிலையில், இன்று பொங்கல் முடிந்த வியாழக்கிழமை எருது விடும் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

கோட்டூா் மலை கிராமத்தில் நடைபெற்ற எருதுவிடும் திருவிழா

இந்த விழாவிற்கு இன்று அதிகாலை கிராமத்தில் உள்ள பெண்கள் அனைவரும் அங்குள்ள மாரியம்மன் கோயில் அருகில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து மாலை விவசாயிகள் தாங்கள் வைத்திருக்கும் காளைகள் மற்றும் பட்டி மாடுகளை அலங்கரித்து கோயில் வளாகத்தில் நிறுத்தி, மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து எடுத்துவரப்பட்ட தீர்த்தத்தை மாடுகளுக்கு தெளித்து விட்டனர்.

பின்னர் ஒவ்வொரு விவசாயிகளும் தனித்தனியாக தாங்கள் வளர்க்கின்ற 20 - 30 மாடுகளை கூட்டமாக வீதியில் அவிழ்த்து விட்டனர். அப்போது கூட்டமாக வரும் மாடுகளை அருகில் நின்று ஆரவாரம் செய்தும், சில இளைஞர்கள் விரட்டி கொண்டும் ஓடினர்.

கோட்டூர் மலையில் நடைபெற்ற இந்த எருது விடும் திருவிழாவில் சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் நாட்டின மாடுகள் கலந்து கொண்டன. இந்த விழாவை அலகட்டு, ஏரிமலை, கோட்டூர் மலை மக்கள் மட்டுமல்லாமல், அருகில் உள்ள கிராமத்தில் இருந்து ஏராளமான மக்கள் கண்டு களித்தனர்

இதையும் படிங்க:

எருது விடும் விழா: பைக்கை பரிசாக வென்ற காளைகள்

Intro:பென்னாகரம் அடுத்த கோட்டூர் மலை கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி எருதுவிடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது-200க்கு மேற்பட்ட காளைகள், பட்டி மாடுகள் பங்கேற்பு.Body:பென்னாகரம் அடுத்த கோட்டூர் மலை கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி எருதுவிடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது-200க்கு மேற்பட்ட காளைகள், பட்டி மாடுகள் பங்கேற்பு.Conclusion:பென்னாகரம் அடுத்த கோட்டூர் மலை கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி எருதுவிடும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது-200க்கு மேற்பட்ட காளைகள், பட்டி மாடுகள் பங்கேற்பு.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்கு உட்பட்ட வட்டுவனஹள்ளி ஊராட்சியில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் கோட்டூர், அலக்கட்டு, எரிமலை ஆகிய மூன்று மலை கிராமங்கள் உள்ளன.

கோட்டூர் மலையில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குடிநீர், சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத இந்த கிராம மக்கள், மலைமீது விவசாய தொழில் செய்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் விவசாய பணிகளுக்காக நாட்டு மாடுகளை வளர்த்து வருகின்றனர். மலை கிராமத்தில் ஆண்டுதோறும் தை பொங்கல் முடிந்து அடுத்து வருகின்ற வியாழக் கிழமையில் அதிகாலை கிராமத்திலுள்ள மாரியம்மன் கோவிலுக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபடுகின்றனர். இதனைத் தொடர்ந்து மாலை தங்கள் வைத்திருக்கின்றன மாடுகளை அலங்கரித்து கிராமத்தின் மந்தை வீதிகளில் பாரம்பரிய முறைப்படி எருது விடும் திருவிழா நடத்துவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த வாரம் பொங்கல் முடிந்த நிலையில், இன்று பொங்கல் முடிந்த வியாழக்கிழமை எருது விடும் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு இன்று அதிகாலை கிராமத்தில் உள்ள பெண்கள் மாரியம்மன் கோவில் அருகில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து மாலை விவசாயிகள் தங்கள் வைத்திருக்கும் காளைகள் மற்றும் பட்டி மாடுகளை அலங்கரித்து கோயில் வளாகத்தில் நிறுத்தி, மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்து எடுத்துவரப்பட்ட தீர்த்தத்தை மாடுகளுக்கு தெளித்து வீதியில் மாடுகளை அவிழ்த்து விட்டனர். இதில் ஒவ்வொரு விவசாயிகளும் தனித்தனியாக தங்கள் வளர்க்கின்ற மாடுகளை 20 முதல் 30 மாடுகளை கூட்டமாக வீதியில் அவிழ்த்து விட்டனர். அப்போது கூட்டமாக வரும் மாடுகளை அருகில் நின்று ஆரவாரம் செய்தும், சில இளைஞர்கள் விரட்டி கொண்டும் ஓடினார். கோட்டூர் மலையில் நடைபெற்ற இந்த எருது விடும் திருவிழாவில் சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் நாட்டின மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. இந்த விழாவை காண அலகட்டு, ஏரிமலை, கோட்டூர் மலை மக்கள் மட்டுமல்லாமல், அருகில் உள்ள கிராமத்தில் இருந்து ஏராளமான மக்கள் கண்டு களித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.