தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி அருகேயுள்ள பி.துரிஞ்சிபட்டியில் அரசு மதுபானகடை ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்த மதுபானக்கடையில் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த குடிமகன்கள் மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர்.
இந்நிலையில், நேற்றிரவு மதுபான கடை ஊழியர்கள் மதுபானம் விற்பனைசெய்த கணக்குகளை முடித்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். அதிகாலை 3 மணி அளவில் அடையாளம் தெரியாத நபா்கள் மதுபான கடையை உடைத்து கடையின் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது, கடையில் பணம் இல்லாததால் திருட வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்து சென்றனர். ஆனால் கடையிலிருந்து மதுபானங்கள் திருடப்படவில்லை. மேலும் அரசு மதுபானகடை பூட்டு உடைக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக பொம்மிடி காவல் துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
இதையும் படிங்க:டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி ரூ. 3.90 லட்சம் கொள்ளை