ETV Bharat / state

பாரதமாதா நினைவாலயத்தின் பெயர் மாற்றப்படவில்லையெனில் போராட்டம்... பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம்... - Dharmapuri

தர்மபுரியில் பாரதமாதா நினைவாலயத்தின் பெயரை பாரதமாதா ஆலயம் என்று பெயர் மாற்றவில்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் பேட்டியளித்தார்

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 30, 2022, 8:14 AM IST

தர்மபுரி: பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள சுப்பிரமணிய சிவா நினைவு மண்டப வளாகத்தில் பாரதமாதா கோயில் அமைந்துள்ளது. ஆனால் இந்த கோயிலுக்கு பாரதமாதா நினைவாலயம் என்று பெயரிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் நினைவிடங்களுக்கே நினைவாலயம் என்று வைப்பார்கள். ஆகவே இந்த கோயிலுக்கு பாரதமாதா ஆலயம் என்று விரைவில் பெயர் மாற்ற செய்ய வேண்டும். அப்படியில்லையென்றால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

அப்போது அதிமுக ஆட்சியிலேயே நினைவாலயம் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று பத்திரிக்கையாளர் கேள்வி எழுப்பினார். அதிமுக முட்டாள் என்றும் நாங்கள் தான் அறிவாளி என்றும் திமுகவினர் சொல்கிறார்களே. அப்படியென்றால் நீங்கள் மாற்றி இருக்க வேண்டாமா எனத் தெரிவித்தார்.

மேலும் கலைஞரின் மகன் மு.க.ஸ்டாலின் துர்பாக்கிய வசமாக முதலமைச்சராக வந்து விட்டார். அவருக்கு ஏன் முதலமைச்சர் பதவி என்றே தெரியவில்லை. நான் சென்ற ஆண்டு நினைவாலயம் என்ற பெயரை மாற்ற வேண்டும் என்று கடிதம் எழுதி இருக்கிறேன். முறையான கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதுரை மாணவருக்கு லட்சத்தீவில் தேர்வு மையமா?... ஒன்றிய அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.