தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், பாலக்கோடு, காரிமங்கலம், கம்மாளப்பட்டி, சோமனாஅள்ளி, புலிக்கரை சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பெருமளவு சாம்பல் பூசணி சாகுபடி செய்கின்றனர்.
பொதுவாக இந்த சாம்பல் பூசணிகளை ஆயுத பூஜை பண்டிகை காலங்களில் விற்பனை செய்யும் வகையில் விவசாயப்பணிகளில் ஈடுபடுவது விவசாயிகளின் வழக்கம்.
ஆயுத பூஜையின்போது திருஷ்டி சுற்றுவதற்கு சாம்பல் பூசணிக்காய் பயன்படுத்தப்படுவதால், தர்மபுரி, பாலக்கோடு பகுதியில் இருந்து பெங்களூரு, சேலம், கோவை உள்ளிட்டப் பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். ஆகையால், இந்த சாம்பல் பூசணிக்காய்களை வியாபாரிகள் விவசாயிகளின் விளைநிலங்களிலேயே மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர்.
ஒரு கிலோ 15 ரூபாய்க்கு ஒரு டன் சாம்பல் பூசணி 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்ற ஆண்டைக் காட்டிலும், இந்த ஆண்டு சாம்பல் பூசணி சாகுபடி செய்த விவசாயிகள் நல்ல லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரூ.1 கோடி மதிப்புள்ள நிலங்களைப் பொது ஊருணிக்குத் தானமாக கொடுத்த குடும்பங்கள்