தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியிலிருந்து ஒகேனக்கல் சாலையில் ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவில் மளிகை பொருள்களை ஏற்றிக்கொண்டு ஒகேனக்கல் நோக்கி சென்றுள்ளார்.
முண்டச்சி பள்ளம் என்ற பகுதியில் செல்லும்போது, கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து, ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுனர் காயம் அடைந்தார்.
மேலும் பேருந்தின் முன்புற கண்ணாடிகள் உடைந்ததால் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனா். பேருந்தில் வந்த சக பயணிகள் உடனடியாக 108 அவசர எண்ணுக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து காயம் அடைந்தவர்கள் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மினி பேருந்து மோதி முதியவர் இறப்பு