ETV Bharat / state

மனைவியை அடித்துக் கொன்ற காவல் உதவி ஆய்வாளர்; ரகசியமாக சடலத்தை எரிக்கவும் முயற்சி! - மனைவியை அடித்துக் கொன்ற காவல் உதவி ஆய்வாளர்

தர்மபுரி: குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்றதுடன் மட்டுமல்லாமல், காவல் உதவி ஆய்வாளர் அவரது சடலத்தை ரகசியமாக எரிக்கவும் முயற்சி செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

assistant police inspector beat his wife and secretly tried to burn the body

author img

By

Published : Nov 22, 2020, 2:46 PM IST

Updated : Nov 22, 2020, 2:59 PM IST

தர்மபுரி மாவட்டம் வெண்ணாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் கார்மேகம். இவர் பொம்மிடி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பேபி (53). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், பேபி நேற்று மாலை உயிரிழந்து விட்டதாக, அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்த கார்மேகம், இன்று அதிகாலையே அவரது சடலத்தை எரிக்க முயற்சி செய்ததாக அவர்களது உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, தர்மபுரி நகர காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர், சம்பவம் தொடர்பாக உதவி காவல்ஆய்வாளர் கார்மேகத்திடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து உயிரிழந்த பேபியின் உறவினர்கள் பேசும்போது, திருமணம் செய்த நாளிலிருந்து இருவருக்கும் தகராறு ஏற்பட்டுவந்தது. சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட சண்டையில் கார்மேகம், பேபியை தலையில் அடித்ததில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

நேற்று மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் பேபி மயக்கம் அடைந்ததால், மாலை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பேபி கரோனா காரணமாக இறந்துவிட்டதாகக் கூறி அவரது சடலத்தை அதிகாலையிலேயே எரிக்க முயற்சி செய்ததாகத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கைது செய்த பின்பும் கும்மியடித்து பாட்டு பாடிய திமுகவினர்!

Last Updated : Nov 22, 2020, 2:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.