ETV Bharat / state

திமுகவின் கொள்கை என்ன?.. ஈரோடு தொகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.. அன்புமணி

author img

By

Published : Jan 29, 2023, 4:44 PM IST

தருமபுரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், “திமுகவின் கொள்கை என்ன? எங்களுக்கு புரியவில்லை; அரசு தெளிவுபடுத்த வேண்டும்” என விமர்சித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ்

தருமபுரி பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்திப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இன்று தருமபுரி வந்தார். அப்போது ராஜாபேட்டை பகுதியில் உள்ள பாமக பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே. மணி இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'தருமபுரி மாவட்டத்தில் நீண்ட காலப் பிரச்னைகள் பல உள்ளன. அதில், முதன்மையான பிரச்னை குடிநீர் பிரச்னை. வேளாண் பிரச்னை அதற்கு தீர்வு அருகிலேயே இருக்கின்றது. ஒட்டுமொத்த மாவட்ட மக்களுடைய கோரிக்கை ஒகேனக்கல் - காவிரி உபநீா் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என மக்கள் பல முறை போராட்டம் நடத்தி இருக்கிறார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தி 10 லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்தி அதனை அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியிருந்தோம். இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தோ்தல் நேரத்தில் ஒகேனக்கல் காவிரி உபநீர் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று அறிவித்தார்.

20 மாத ஆட்சிக் காலத்தில் இன்னும் எந்த அறிவிப்பும் வரவில்லை. மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஏதோ கடமைக்கு ஆய்வு செய்யப்படுகிறது என்று சொல்கிறார். மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத அரசு. திட்டத்தை நிறைவேற்றக்கோரி பாமக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.

தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு நில அளவைப் பணிகள் முடிவடைந்துள்ளது. இது குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளை சந்தித்து பொதுமக்களைப் பாதிக்காத வகையில் ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை அதிகாரியிடம் எடுத்து தெரிவித்துள்ளோம். மத்திய பட்ஜெட்டில் மொரப்பூர் - தருமபுரி ரயில் திட்டத்திற்கு நிதி ஒதுக்க அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்துவோம்.

சின்னாறு பகுதியில் இருந்து தருமபுரி வரும் வரத்து கால்வாயினை அரசு தூர்வார வேண்டும். இல்லையென்றால் அடுத்து சில மாதங்களில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து கால்வாயைத் தூர்வாரும் பணியை மேற்கொள்வார்கள். இப்பணியில் நானும் ஈடுபடுவேன். தொப்பூர் கணவாய் பகுதியில் அதிக விபத்துகள் நடைபெற்று வருகிறது. ஆண்டு ஒன்றுக்கு 80 பேர் விபத்துகளால் உயிரிழக்கின்றனர்.

தொப்பூர் சாலையைச் சீரமைக்க மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சென்றுசந்தித்து வலியுறுத்துவேன் . இச்சாலை பிரச்னை தருமபுரி பிரச்சனை மட்டுமல்ல; இந்தியாவின் பிரச்னை. குடியரசு தினத்தை முன்னிட்டு ஒரு விசித்திரம் நடைபெற்றுள்ளது. சென்னையில் முதலமைச்சர் கள்ளச்சாராயத்தை ஒழித்ததற்காக காவலர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

கரூர் மாவட்ட ஆட்சியர், கரூர் டாஸ்மாக் சாராயம் அதிகமாக விற்பனை செய்ததற்காக நற்சான்று வழங்கி இருக்கிறார். இந்தியாவில் எங்கேயுமே இது நடக்காது. இந்த விவகாரம் எங்களுக்குப் புரியவில்லை அரசு தெளிவுபடுத்த வேண்டும். திமுகவின் கொள்கை என்ன? மது சார்ந்த கொள்கை என்ன? பூரண மதுவிலக்கு கொண்டு வருவீர்களா? படிப்படியாக கொண்டு வருவீர்களா? அல்லது அதை முழுமையிலும் மறந்து விட்டீர்களா, இல்லை கொண்டுவரவே மாட்டீர்களா?

அதை முதலமைச்சர் அல்லது மற்ற யாராவது தெளிவுபடுத்த வேண்டும். ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் ஆகிறது. எத்தனை மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. திமுக நிறுவனர் அண்ணாவின் கொள்கையை நடைமுறைப்படுத்துங்கள். மதுவை ஒழிக்க வேண்டும் அல்லது படிப்படியாக குறைக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் கூட கடையை மூடினார்கள். அதற்குக் காரணம் பாட்டாளி மக்கள் கட்சி.

இடைத்தேர்தல் மீது பாமகவிற்கு நம்பிக்கை இல்லை. கடைசியாக பாமக சந்தித்த இடைத்தேர்தல் பென்னாகரம் இடைத்தேர்தல். அதற்குப் பிறகு 13 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி எந்த இடைத்தேர்தலிலிலும் பங்கு பெறவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை முடிவில் இடைத்தேர்தல் அவசியம் அற்றது. இடைத்தேர்தலால் நேரம், பொருள், நிர்வாகம் அனைத்துமே வீணாகிறது. ஒரு மாதத்திற்கு அனைத்து அமைச்சர்களும் அந்த தொகுதியில் தான் பணியாற்றப் போகிறார்கள். ஒரு மாதம் தமிழ் நாட்டின் நிர்வாகம் ஸ்தம்பிக்கும். இது தேவையற்றது.

இடைத்தேர்தல் நடக்கும் ஈரோடு தொகுதி மக்கள் கொடுத்து வைத்தவர்கள். இடைத்தேர்தல் முடிவதற்குள் ஒவ்வொரு குடும்பமும் இரு சக்கர வாகனங்களை வாங்கி விடுவார்கள். பாமகவின் நிலைப்பாடு நாங்களும் போட்டியிட மாட்டோம். யாருக்கும் ஆதரவு கிடையாது. இடைத்தேர்தலில் ஒவ்வொரு குடும்பமும் லட்சாதிபதி ஆகி விடுவார்கள். இடைத்தோ்தல் என்றால் திருமங்கலம் ஃபார்முலா பெருக்கல் 10'' என்றார் அன்புமணி ராமதாஸ்.

இதையும் படிங்க: "பத்ம விருது பெற்றவர்களின் எழுச்சியூட்டும் கதைகளை அனைவரும் படிக்க வேண்டும்" - பிரதமர் மோடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.