தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதியில் ஐந்தாவது முறையாக உயர் கல்வி, வேளாண் துறை அமைச்சா் கே.பி. அன்பழகன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 6) தன் சொந்த கிராமமான கெரகோடஅள்ளி அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தில் அமைச்சா் கே.பி. அன்பழகன் தனது குடும்பத்தினருடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சர் கே.பி. அன்பழகன், “ஐந்தாவது முறையாக பாலக்கோடு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன். மீண்டும் வெற்றிபெறுவேன்.
தமிழ்நாடு முழுவதும் அதிமுக அமோக வெற்றிபெற்று, 2021ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவார். தமிழ்நாட்டில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சியே தொடரும்” என்றார்.
இதையும் படிங்க : மீண்டும் போட்டியிடும் எம்எல்ஏ-களின் சொத்து மதிப்பு -ஒரு பார்வை