ETV Bharat / state

'அதிமுக இனிமேல் தேறாது' - டிடிவி தினகரன் - வன்னியர் திருமண மண்டபத்தில் தர்மபுரி அமமுக மாவட்ட செயற்குழு கூட்டம்

ஜெயலலிதா இருந்தபொழுது ஆடாக இருந்தவர்கள் ஓநாய்களாக மாறிவிட்டார்கள், அதிமுக இனிமேல் தேராது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிமுக இனிமேல் தேராது- டிடிவி தினகரன்..!

author img

By

Published : Jul 4, 2022, 6:12 PM IST

Updated : Jul 4, 2022, 7:35 PM IST

தர்மபுரி: வன்னியர் திருமண மண்டபத்தில் தர்மபுரி அமமுக மாவட்ட செயற்குழு கூட்டம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு டிடிவி தினகரன் சிறப்புரையாற்றினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுக செயற்குழு உறுப்பினர்களுக்கு 25 லட்சம் முதல் 5 கோடி வரை பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது என்று நான் தெரிவித்தேன். இதற்கு கே.பி.முனுசாமி மானநஷ்ட வழக்கு தொடர்வதாக பேட்டி அளித்திருக்கிறார்.

மானநஷ்ட வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திப்பேன்.பொதுமக்கள் பேசியதை தான் நான் பேசினேன். காலை 11 மணி வரை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தருபவர்கள் மாலை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிக்கிறேன் என்று சொல்கிறார்கள். அவர்களுக்கு என்ன ஞானோதயம் வந்தது. குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.

தேர்தல் ஆணையத்தில் முறையாக பதிவு செய்து தனியாக சின்னம் பெற்று ஜனநாயக முறைப்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் செயல்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் தவறான ஆட்சி இருந்ததால் மக்கள் திமுகவிற்கு வாய்ப்பு அளித்திருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து போராடி அமமுக ஆட்சியை பிடிக்கும்.

ஜெயக்குமார் ஆடு நனைகிறதே ஓநாய் அழுகிறது என்று பேசியிருக்கிறார். ஓநாய் கூட்டங்களே இவர்கள் தான். ஜெயலலிதா இருந்தபொழுது ஆடாக இருந்தவர்கள் ஓநாய்களாக மாறிவிட்டார்கள், அதிமுக இனிமேல் தேராது.

அதிமுகவில் பொதுச் செயலாளர் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி, நாங்கள் இலக்கை நோக்கி அர்ஜூனன் போல் பயணிக்கிறோம்" என்றார்.

அமமுக ஆட்சியை பிடிக்கும்

இதையும் படிங்க:வரும் ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்காது - உறுதியாக சொல்லும் வைத்திலிங்கம்.. பின்னணி என்ன?

Last Updated : Jul 4, 2022, 7:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.