தருமபுரி அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் உறுப்பினர்களிடமிருந்து விருப்பமனு பெறும் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது.
இந்நிகழ்ச்சியை தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலாளருமான கே.பி. அன்பழகன் தொடங்கிவைத்தார்.
தருமபுரி மாவட்டத்திலுள்ள 251 ஊராட்சிகள், 10 பேரூராட்சிகள், தருமபுரி நகராட்சி, 10 ஒன்றியங்களில் போட்டியிடக்கூடிய அதிமுகவினர் இன்று தங்களது விருப்ப மனுக்களை கட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்தனர்.
இதில், ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டு இன்று தங்களது விருப்ப மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதையும் படிங்க : 'உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றியை மக்கள் முடிவு செய்து விட்டார்கள்' - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்