தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே சோளபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி. இவர் கர்நாடகாவில் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சின்னசாமி குடும்பத்துடன் தனது வீட்டின் அருகிலுள்ள அரசு பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவை பார்க்கச் சென்றுள்ளார்
பின்னர் வீட்டிற்கு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 10 பவுன் தங்க நகை, வெள்ளி கொலுசு, 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
தகவலறிந்து காவல்துறையினர், இதுகுறித்து வழக்குபதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதற்கிடையே அதே பகுதியில் மற்றொரு வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், சம்பவ இடங்களுக்கு பென்னாகரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மேகலா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: பிறந்த குழந்தையையும் விட்டுவைக்காத கொடூர கொரோனா!