ETV Bharat / state

மலைக்கிராம மக்களுக்கு உதவிய தனியார் சோலார் நிறுவனம் - தருமபுரி மாவட்டச் செய்திகள்

தருமபுரி: கரோனா காரணமாக உணவின்றி, வறுமையில் வாடி வந்த மலைக் கிராம மக்களுக்குத் தனியார் சோலார் நிறுவனம் சார்பில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

solar
solar
author img

By

Published : Apr 29, 2020, 2:43 PM IST

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த வட்டுவனஅள்ளி ஊராட்சியில் கோட்டூர், அலக்கட்டு, ஏரிமலை ஆகிய மூன்று மலைக்கிராமங்கள் அமைந்துள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் மலை அடிவாரத்தில் எட்டு கிலோ மீட்டர் தூரம் கரடு முரடான பாதைகளைக் கடந்து சென்றால்தான், இந்த மூன்று மலைக் கிராமங்களை அடைய முடியும். வானம் பார்த்த பூமி. மானாவாரி விவசாயம் தான் பிராதானமான வாழ்வாதாரமாக உள்ளது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட மலை வாழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த மூன்று மலைக்கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் தினந்தோறும் 7 கிலோ மீட்டர் முதல் 10 கிலோ மீட்டர் வரை நடந்தே சென்று, அத்தியாவசியப் பொருட்களை வாங்க வேண்டியுள்ளது. தற்போது கரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், இம்மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் தினக்கூலித் தொழிலாளர்களாக இருப்பதால் போதிய வருமானம் இன்றி வறுமையில் வாடி வருகின்றனர்.

இந்நிலையில், ஓசூரில் செயல்படும் சோலார் நிறுவன அமைப்பின் சார்பில், பென்னாகரம் அருகே உள்ள வட்டுவனஅள்ளி ஊராட்சியில் உள்ள அலக்கட்டு, கோட்டூர், ஏரிமலை ஆகிய மலைக் கிராமங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. இதில் தக்காளி, கத்தரிக்காய், கோஸ், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, கொத்தமல்லி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பத்து வகையான காய்கறிகள் என 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கிய சோலார் நிறுவனம்

இந்த மலைக் கிராமங்களுக்கு போதிய சாலை வசதி இல்லாததால் மூன்று கிராம மக்களையும் தரைப்பகுதிக்கு வரவழைத்து, நிவாரண உதவிகளை வழங்கினர். அதேபோன்று பாலக்கோடு அருகே உள்ள பெல்லுஹள்ளி கிராமத்தில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கும் நிவாரண உதவியாக காய்கறிகள் வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: 'இஸ்லாமியர்களிடம் வாங்க வேண்டாம்' - பாஜக எம்எல்ஏவின் சர்ச்சைப் பேச்சுக்கு ஜே.பி. நட்டா கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.