தருமபுரி மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல், கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு என அடுத்தடுத்து வரும் விடுமுறை நாள்களில் அரசு மது பாட்டில்களைப் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின்பேரில் நகரக் காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் தலைமையில் இரவு மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள ஒட்டப்பட்டியைச் சேர்ந்த ரவி (52), சோகத்தூரைச் சேர்ந்த அர்ஜுனன், (42), கடத்தூரைச் சேர்ந்த அன்பு ஆகிய மூவரும் அரசு மது பாட்டில்களைத் திருட்டுத்தனமாகப் பதுக்கிவைத்து அனுமதியின்றி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அவர்கள் மூவரையும் தருமபுரி காவல் துறையினர் கைதுசெய்து அவர்களிடமிருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான 1500 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: டூவீலரில் மது விற்பனை - சுற்றி வளைத்த காவல் துறை!