தருமபுரி மாவட்டத்தில் 144 தடை உத்தரவைப் பின்பற்ற மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து வேண்டுகோள்விடுத்து-வருகிறது. ஆனால், சில இளைஞர்கள் 144 தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் சாலைகளில் பயணம் செய்துவருகின்றனர். இவர்களைக் கட்டுப்படுத்த மாவட்ட காவல் துறை தொடர்ந்து ரோந்துப் பணியிலும், வாகனத் தணிக்கையிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில், நேற்று 144 தடை உத்தரவை மீறிய 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 112 வாகனங்களைக் காவல் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர். இதுமட்டுமில்லாமல், தேவையின்றி வெளியில் இருசக்கர வாகனத்தில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.
அதேபோல், நேற்று இரவு நான்கு சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித் திரிந்தவர்கள் மீது காவல் துறையினர் தடியடி நடத்தி விரட்டியடித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:144 தடையை மீறிய வாகன ஓட்டிகள்: தோப்புக்கரணம் போடவைத்த போலீஸ்!