கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பாவைகுளம் பகுதியைச் சேர்ந்த விவசாயி சிவக்குமார் (32). இவருக்கு பானுப்பிரியா(28) என்ற மனைவியும், சிவப்பிரியா(10) என்ற மகளும், கௌதம் (5) என்ற மகனும் உள்ளனர். கடந்த சில நாள்களாக சிவக்குமாருக்கும் பானுப்பிரியாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பானுப்பிரியா அதே பகுதியில் உள்ள முந்திரி தோப்பிற்கு சென்று, முந்திரி மரத்தில் தனது புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து அவ்வழியாக வந்த சிலர் துக்கில் தொங்கியபடி பெண் பிணமாக இருப்பதைக் கண்டு காவல் துறையினருக்கு தகவலளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காடாம்புலியூர் காவல் துறையினர் பெண்ணின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் விசாரணையையும் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க:திகார் சிறையில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை!