விருத்தாசலத்தில் மார்ச் 7,8ம் தேதிகளில் இருபிரிவை சேர்ந்த மாணவர்களிடையே தலைவர்கள் உருவப் படம் வைப்பது தொடர்பாக பிர்சனை எழுந்துள்ளது. இதை தொடர்ந்து மேலும் பிரச்னை தீவிரமடையாமல் இருக்க கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதையடுத்து இருதரப்பு மாணவர்களிடையே கல்லூரி முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இன்று கல்லூரி திறக்கப்பட்டது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் வேலு பாரத்டிவி செய்தியாளருக்கு அளித்த
பேட்டியில் கூறியதாவது, கடந்த
மார்ச் 7,8ம் தேதிகளில் இருவேறு பிரிவு மாணவர்கள் இடையே தலைவர்கள் படம் வைப்பது தொடர்பாக சமூக பிரச்னை ஏற்படும் வகையில் இருந்தது. இதையடுத்து உடனடியாக ஆட்சிமன்றக்குழு மாணவர்களின் நலன் கருதி அந்த இரண்டு படங்களையும் முதல்வர் என்கிற முறையில் நானே நேரடியாக சென்று எடுத்து எனது அறையில் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். இந்நிலையில் இன்று அன்று 10 மாணவ பிரதிநிதிகளுடன் மூத்த பேராசிரியர்கள் கொண்ட குழு பேசி சமரச முடிவெடுத்ததை தொடர்ந்து வரும் நாட்களை கல்லூரிகளை அமைதியான முறையில் சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இவவாறு அவர் கூறினார்.