கடலூர்: 'கிராமசபை மீட்புப் பயணம் 2021' என்ற தலைப்பில், தொடர்ந்து ஐந்தாவது நாள் பயணமாக இராஜேந்திரப்பட்டினம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை மீட்பு கூட்டத்தில் ஊராட்சித் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தடையின்றி கிராம சபை நடத்த வலியுறுத்தி இந்த கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கிராம சபையின் முக்கியத்துவம், அது தடைபட்டதால் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், கிராமசபையைக் கூட்டியாக வேண்டிய அவசியம் பற்றியும் விரிவாக உரையாடினர். கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், ஊராட்சி சார்ந்த தங்களது பிரச்னைகளைக் களைய, அனைவரும் கூட்டாக செயல்பட வேண்டிய அவசியம் குறித்த கருத்துகளை முன்வைத்தனர்.
இறுதியில் இராஜேந்திரப்பட்டிணம் ஊராட்சி தலைவர் திரு. சுரேஷ் பேசுகையில், “ஊராட்சி நிர்வாகத்தில் தமக்கு இருக்கும் சவாலான காரணிகள், ஊராட்சி ஒன்றிய அளவில் அலுவலர்களின் ஆதிக்கம், நிதிகள் பகிர்ந்தளிக்கப்படாமை ஆகியவற்றால் வளர்ச்சித் திட்டங்கள் தடைபடுகின்றன.
தமிழ்நாடு அரசு கிராமசபை ஊராட்சித் தலைவர்கள் கூட்டத் தளர்வுகளை அறிவிக்க வேண்டும். ஊராட்சிக்கான நிதியை உடனடியாக பகிர்வதோடு, அதன் அதிகாரங்களையும் உறுதிப்படுத்த வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: நல்ல நேரம் போஸ்ட் - துரைமுருகன் மகனுக்கு கெட்ட நேரம்