ETV Bharat / state

ஆறு ஆண்டுகளுக்கு பின் கோடையில் நிரம்பிய வீராணம் - சென்னை குடிநீர்

கடலூர்: சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வீராணம் ஏரி 47 அடி வரை நிரம்பியுள்ளதால், ஜூன் மாதம் வரை தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஆறு ஆண்டுகளுக்குப் கோடையில் நிரம்பிய வீராணம்
author img

By

Published : May 6, 2019, 9:10 PM IST

சென்னை மாநகரத்தின் குடிநீர் பிரச்னையை போக்கும் முக்கிய நீர் ஆதாரமாக கடலூரில் உள்ள வீராணம் ஏரி விளங்குகிறது.

ஆனால், கடந்த சில வாரங்களாக தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்வரத்து வெகுவாகக் குறைந்தது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 15ஆம் தேதி முதல், மேட்டூர் அணையிலிருந்து கீழணைக்கு வரும் நீரை, வீராணம் ஏரிக்கு அனுப்புவது நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமானால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். இதையடுத்து கடந்த மாதம் 31ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து கீழணைக்கு மீண்டும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனையடுத்து கீழணையிலிருந்து, வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், நீர் மட்டம் கிடுகிடுவென உயரத் தொடங்கி, தற்போது 46.2 அடியாக நீர் இருப்பு உள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டுக்குப் பிறகு, வீராணம் ஏரி மீண்டும் கோடை காலத்தில் நிரம்பியுள்ளது. இதன்மூலம் சென்னையின் குடிநீர் தேவையை ஜூன் மாதம் வரை சமாளிக்க முடியும் என பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் அருணகிரி தெரிவித்தார்.

ஆறு ஆண்டுகளுக்குப் பின் கோடை காலத்தில் நிரம்பிய வீராணம் ஏரி

கடலூர்
மே 6,
சென்னை மாநகரத்தில் குடிநீர் பிரச்சினையை போக்க கூடிய முக்கிய நீராதாரமாக கடலூரில் உள்ள வீராணம் ஏரி விளங்குகிறது. இந்த ஏரியின் மூலம் காட்டுமன்னார்கோயில் மற்றும் அதை சுற்றி உள்ள விளை நிலங்களுக்கு பாசன வசதி செய்ய இந்த ஏரியின் மூலம் நீர் அனுப்பப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களாக வெயில் சுட்டெரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்வரத்து குறைந்தது இதனால் கடந்த ஜனவரி மாதம் 15-ந் தேதி கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டுமானால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். அதற்காக கடந்த மாதம் 31-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து கீழணைக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

இதனால் கீழணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து. இதையடுத்து கீழனையிலிருந்து வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 2ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனை தொடர்ந்து வீராணம் ஏரியின் நீர் மட்டம் 46.2 அடியாக உள்ளது. மேலும் 6000 மில்லியன் கன அடி நீரைத் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.

வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு தினமும் 15 மில்லியன் கனஅடி நீர் குடிநீர் தேவைக்காக அனுப்பப்பட்டு வருகிறது வீராணம் ஏரியில் நீர் குறைய குறைய கீழணையில் இருந்து தண்ணீர் பெறப்பட்டு அதன்மூலம் சென்னையின் குடிநீர் தேவையை ஜூன் மாதம் வரை சம்பாதிக்க முடியும். மேலும் கடந்த 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது  வீராணம் ஏரி மீண்டும் கோடை காலத்தில் நிரம்பியுள்ளது என பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் அருணகிரி தெரிவித்தார்.

Video send ftp
File name: TN_CDL_01_06_VEERAANAM_LAKE_6YEARS_7204906

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.