ETV Bharat / state

'சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைநிலைப் படிப்பில் சேர வேண்டாம்' - பல்கலை மானியக் குழு எச்சரிக்கை - பல்கலை மானியக் குழு எச்சரிக்கை

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தொலைநிலைப் படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படாததால், மாணவர்கள் சேர வேண்டாம் என பல்கலைக் கழக மானியக்குழு (United Grants Commission) எச்சரித்துள்ளது.

யுஜிசி
யுஜிசி
author img

By

Published : Mar 29, 2022, 5:51 PM IST

சென்னை: தொலைநிலைக்கல்வி மூலம் படிப்பை நடத்த, மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் பெற வேண்டும். அங்கீகாரம் பெறாத படிப்புகளை படித்தால், உயர் கல்வியில் சேர முடியாது, வேலை வாய்ப்பிற்கும் கல்வித் தகுதியாக கருதப்படாது. எனவே, அங்கீகாரம் இன்றி, தொலைநிலை படிப்பை நடத்த பல்கலைக்கழக மானியக்குழு தடை விதித்துள்ளது.

இதுதொர்பாக அதன் செயலர் ரஜனீஷ் ஜெயின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், 'சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் யு.ஜி.சி. (United Grants Commission) , அங்கீகாரம் பெறாமல், தொலைநிலை படிப்புகளில் (Distance Education) மாணவர்களைச் சேர்த்து வருகிறது. இது தொலைநிலைப் படிப்புக்கான ஒழுங்குமுறை விதிகளை முழுமையாக மீறும் செயல்.

அங்கீகாரம் கிடையாது: பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரம் பெறாமல், எந்த உயர் கல்வி நிறுவனமும், தொலைநிலை, திறந்த நிலை மற்றும், ஆன்லைன் படிப்புகளை நடத்த அனுமதி கிடையாது. அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு 2014-15ஆம் ஆண்டு வரை மட்டுமே, தொலைநிலைப்படிப்புகளை நடத்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின், அந்நிறுவனம் அங்கீகாரம் பெறவில்லை.

யுஜிசி அறிவிப்பு
யுஜிசி அறிவிப்பு

மாணவர்கள் சேர வேண்டாம்: எனவே, பல்கலைக்கழக மானியக்குழு அங்கீகாரம் பெறாமல், அண்ணாமலை பல்கலைக்கழகம் நடத்தும் படிப்புகள் செல்லத்தக்கதல்ல. அந்த படிப்புகளுக்கும், அதனால், வேலைவாய்ப்புத் தகுதியில் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கும், அந்த பல்கலைக்கழகமே முழு பொறுப்பாகும். எனவே, அப்பல்கலைக்கழகம் நடத்தும் தொலைநிலை படிப்புகளில், மாணவர்கள் சேர வேண்டாம். அங்கீகாரம் பெறாத பட்டப் படிப்புகளில், மாணவர்களை சேர்த்து வருவது மிகவும் ஆபத்தானது' என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: “வியாபாரந்தான்... ஆனா வாடிக்கையாளர்களுக்கு நல்லது செய்யுறேன்” - கரும்பு பால் வியாபாரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.