பேரறிஞர் அண்ணாவின் 111ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் அமமுக சார்பில் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா திடலில் பிறந்தநாள் விழாக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அம்மமுகவின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், அமமுக தேர்தலில் ஐந்து விழுக்காடு வாக்கு மட்டுமே பெற்ற கட்சி எனக் கூறுபவர்கள் எதற்காக எங்கள் கட்சியிலிருந்தும் நிர்வாகிகளை தூண்டில்போட்டு பிடிக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், மக்களுக்குத் தேவையான திட்டங்களை குறிப்பாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மீத்தேன் திட்டத்தை ரத்து செய்வது போன்ற மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் மத்திய அரசை பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார்.
மேலும் தற்போது, நடைபெறும் எடப்பாடி ஆட்சி, ஜெயலலிதா பெயரைக் கூறிக்கொண்டு மாணவர்களின் எதிர்காலத்தை குழிதோண்டி புதைத்துவிட்டனர் என்றும் அமமமுக பற்றி 99 விழுக்காடு வதந்தியை பரப்பிவருகின்றனர் என்றும் குற்றம்சாட்டினார்.