கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில், திருவாதிரை தரிசன விழா டிசம்பர் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருவாதிரை தரிசனம், இன்று (டிசம்பர் 30) வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக நடராஜர், சிவகாமி சுந்தரி அம்பாள் அலங்கரிக்கப்பட்டடு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனம் ஆடியபடி சிவ மேள வாத்தியங்கள் முழங்க பொதுமக்களுக்கு காட்சி அளித்தார். அப்போது, சிவ சிவா என்று முழக்கங்கள் எழுப்பி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவாதிரை தரிசனத்தை முன்னிட்டு, கரோனா பரிசோதனை மருத்துவக் குழு அமைக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் உடல் பரிசோதனை செய்த பின்னரே ஆலயத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.