கடலூர்: திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்டு மொத்தம் 400 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. நடப்பு ஆண்டுக்கான செமஸ்டர் தேர்விற்கு மாணவர்கள் தேர்வு கட்டணத்தைச் செலுத்த, ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் ரிஜிஸ்டர் எண் மூலம் பல்கலைக்கழகத்திற்கான சர்வரில் (STUDENT LOGIN) கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்கள்: கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் பலி.. விழுப்புரம் விரையும் முதலமைச்சர் ஸ்டாலின்!
மேலும், கடந்த செமஸ்டர் தேர்வில் தவறியவர்கள் எழுதிய தேர்வுக்கான ரிசல்ட் வராத நிலையில், வரும் தேர்வுக்கு மாணவர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த இன்று (மே 15) தான் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது ஒருபுறம் இருக்க ரிஜிஸ்டர் எண் மூலம் தேர்வுக் கட்டணம் செலுத்தும் முறை, தற்போது புதிதாக மாணவர்களுக்கு அறிமுகப்படுள்ளது. எனவே, இதனால் பல மாணவர்கள் தங்கள் தொலைபேசியில் இருந்து ஜிபே மூலம் செலுத்த முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.
மேலும், பல்கலைக்கழக மாணவர்கள் ஒரே நேரத்தில் தேர்வுக் கட்டணம் செலுத்த முயற்சிப்பதால், பல்கலைக்கழக சர்வர் முடங்கியது. இதனால் மாணவர்கள் தேர்வு கட்டணத்திற்கான இறுதி நாளை நீடித்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: 12 பேர் உயிரைக் குடித்த கள்ளச்சாராயம்.. தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்த டிஜிபி ஆணை!