குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று முதல் வருகிற 8ஆம் தேதி வரை ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமைதாங்கி முதல் கையெழுத்திட்டு, கையெழுத்து இயக்கத்தை தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது:
குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் தேசிய குடிமக்கள் பதிவேடு தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தியும், மாநிலம் தழுவிய அளவில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான தோழமைக் கட்சிகளின் சார்பில் கையெழுத்து இயக்கம் தொடங்கியிருக்கிறது.
பட்ஜெட் என்பது வெறும் அலங்காரம் ஆரவாரம் உள்ள ஒரு உரையாகத்தான் அமைந்திருக்கிறது. அதல பாதாளத்தில் சரிந்து கிடக்கக்கூடிய பொருளாதாரத்தை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
அதேபோல விவசாயிகளுக்கும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கு எந்த வகையிலும் இது பயனளிக்காத ஒரு பட்ஜெட் இதுவாகும்.
நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும்போது, பொருளாதார வளத்தை எல்லாம் தாண்டி வரலாறு பண்பாடு என்ற வகையில் அவருடைய உரை மூன்று மணி நேர உரையாக அமைந்தது. அதுவே இதுவரையில் இல்லாத ஒன்று.
வரலாற்றைத் திரிக்கும் வேலை. சிந்து சமவெளி, ஹரப்பா நாகரிகத்தை சரஸ்வதி சிந்து சிவிலிஷயேசன் என்று சொல்லக்கூடிய மிக மோசமான ஒரு வரலாற்றுத் திரிபை அவர் தனது உரையில் குறிப்பிட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம்” என்றார்.
இதையும் படிங்க: ரஜினி பட 'பஞ்ச்' பேசும் அழகிரி: செல்போனில் இருவரும் பேசியது என்ன?