ETV Bharat / state

கரும்பு ஆலை திவால் சட்டத்தில் திருத்தம் வேண்டும் - விவசாயிகள் போராட்டம்! - கரும்பு நிலுவைத்தொகை வழங்க போராட்டம்

கடலூர்: கரும்பு ஆலை திவால் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து முன்னுரிமை கடன்தாரர்களாக தங்களைச் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

sugarcane farmers protest cuddalore
author img

By

Published : Sep 27, 2019, 9:56 PM IST

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்த கரும்பு விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் திவால் சட்டத்தின்படி சர்க்கரை ஆலைக்கு கரும்பு கொடுத்த விவசாயிகள் இயங்குமுறை கடனாளிகளாக பரிசீலிக்கப்படுகிறார்கள்.

ஆலை நலிவுற்றால், திவால் அதிகாரி நியமனம் செய்யப்படும்போது பாதுகாக்கப்பட்ட கடனாளராக கருதப்பட்டு வங்கிகளின் கடன் முதலில் அடைக்கப்படுகிறது . அதன் பிறகு மீதமுள்ள தொகை இருந்தால் மட்டுமே கரும்பு விவசாயிகளுக்கு கிடைக்கும் என்ற நிலை உள்ளது.

கரும்பு விவசாயிகள் போராட்டம்

மேற்படி திவால் சட்டத்தில் கரும்பு விவசாயிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும், கம்பெனி சட்டத்தில் கரும்பு விவசாயிகள் முன்னுரிமை கடன்தாரர்கள் என்கிற வகையில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இதேபோல் வேலூர் மாவட்ட கரும்பு விவசாயிகள், தமிழ்நாடு அரசின் கூட்டுறவு ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய ரூ 40 கோடி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நிலவைத்தொகை கேட்டு கரும்பு விவசாயிகள் போராட்டம்

இதில், அரசு உடனடியாக நிலுவை தொகையை வழங்காவிட்டால் விரைவில் வேலூர் கூட்டுறவு ஆலைக்குள் சென்று தர்ணா போராட்டம் நடத்துவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:'காப்பான்' சூர்யா எங்கள் நம்பிக்கை - காவிரி விவசாயிகள் சங்கம்!

Intro:கடலூரில் கரும்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்Body:கடலூர்
செப்டம்பர் 27,

கடலூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் கரும்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். அப்போதுகரும்பு விவசாயிகள் திடீர் என ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மத்திய அரசின் திவால் சட்டத்தின் படி சர்க்கரை ஆலைக்கு கரும்பு கொடுத்த விவசாயிகள்
இயங்குமுறை கடனாளிகளாக பரிசீலிக்கப்படுகிறார்கள். ஆலை நலிவுற்றால்,
திவால் அதிகாரி நியமனம் செய்யப்படும் போது பாதுகாக்கப்பட்ட கடனாளர் வங்கிகள் கருதப்படுகிறது. அதன் அடிப்படையில், ஆலைக்கு கடன் கொடுத்த
வங்கியின் கடன் தொகை அடைந்த பிறகு, மீதமுள்ள தொகை இருந்தால் மட்டுமே கரும்பு
விவசாயிகளுக்கு கிடைக்கும் என்ற நிலைதான் தற்போது உள்ளது. மேற்படி திவால் சட்டத்தில் கரும்பு
விவசாயிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். முன்னுரிமை கடன்தாரர்கள் என்கிற வகையில்
கம்பெனி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய - மாநில அரசுகளின் கவனத்தை கவரும் வகையில்
கரும்பு விவசாயிகள் பாதுகாக்கக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, தென் இந்திய கரும்பு விவசாயிகள் சங்கம்
தமிழகம் மற்றும் புதுவை மாநில தனியார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.