அந்தமான் கடல் பகுதியில் இன்று (ஏப். 3) காலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் (Depression) உருவானது. இது, அந்தமான் போர்ட் பிளேரில் இருந்து கிழக்கு வட கிழக்காக 40 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இந்நிலையில், இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வடகிழக்கு திசையில் மியான்மர் கரை நோக்கி நகரும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, கடலூர் துறைமுகத்தில் புயல் தூர முன்னறிவிப்பு கொடி எண் 1 இன்று (ஏப்.3) நண்பகல் 12 மணிக்கு ஏற்றப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிவர், புரெவி புயல்களின் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.286.91 கோடி கூடுதல் நிதியுதவி