ETV Bharat / state

பாதுகாப்பு வசதிகள் செய்து தர மருத்துவர்கள், செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்! - staff nurse protest at cuddalore

கடலூர்: கரோனா நெருக்கடியிலும், போதிய வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி மருத்துவர்கள், செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு வசதிகள் செய்து தரக் கோரி மருத்துவர்கள், செவிலியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!

author img

By

Published : May 9, 2020, 9:30 AM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கரோனா பெருந்தொற்று நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் கூறி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போதிய வசதிகள் செய்து தரப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், இதுவரை அவர்களுக்கு எந்தவித வசதிகளும் செய்து தரப்படவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே, நான்கு பயிற்சி மருத்துவர்கள், இரண்டு செவிலியர்கள் உள்பட ஆறு பேருக்கு கரோனா பெருந்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையே, போதிய வசதிகளின்றி நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கிறோம். எங்களுக்கு என்ன பாதுகாப்பிருக்கிறது என கேள்வியெழுப்பிய செவிலியர்கள், திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில், 150-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், ஊழியர்கள் தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மருத்துவமனை கண்காணிப்பாளர், நிர்வாகிகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தப் பலனும் அளிக்காததால், ஊழியர் சங்கத்தை சேர்ந்தவர்கள் சிலர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்களுக்கும், சங்கத்தினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இது குறித்து, தகவலறிந்த பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமோகன் சம்பவ இடத்துக்கு விரைந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதேபோல், சிதம்பரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் செய்து தருவதாக உறுதி அளித்ததன் பேரில், தற்காலிகமாக போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இதையும் படிங்க: விபத்தில் தலைகீழாக கவிழ்ந்த கார் - குடிபோதையில் நேர்ந்த விபரீதம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.