ETV Bharat / state

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம்பெற வேண்டுதல்! வீரட்டானேஸ்வரர் கோயிலில் தொண்டர்கள் கூட்டு பிரார்த்தனை! - Veerattaneswarar Temple

Vijayakanth: தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டி திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோயிலில் அக்கட்சி தொண்டர்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 1, 2023, 5:52 PM IST

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலம்பெற வீரட்டானேஸ்வரர் கோயிலில் கூட்டு பிரார்த்தனை

சென்னை : மூச்சு திணறல் காரணமாக, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விஜயகாந்த், விரைவில் குணமடைய அவரது ரசிகர்கள், தேமுதிக தொண்டர்கள் என பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். அந்தவகையில், திருவதிகை வீரட்டானேசுவரர் கோயிலில் தேமுதிக தொண்டர்கள் இன்று (டிச. 1) கூட்டுப் பிரார்த்தனை செய்தனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பெற வேண்டி, கடலூர் வடக்கு மாவட்ட தேமுதிக செயலாளர் சிவக்கொழுந்து தலைமையில் திருவதிகையில் உள்ள புகழ்பெற்ற வீரட்டானேஸ்வரர் கோயிலில் ஆயுள் ஹோமம் நடத்தப்பட்டு கூட்டுப் பிரார்த்தனை செய்யப்பட்டது. அதேபோல், விஜயகாந்த் விரைவில் குணமடைய வேண்டி பண்ருட்டியில் அக்கட்சியின் நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

நடிகர் விஜயகாந்த் கடந்த சில நாட்களாக, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என தேமுதிகவினர் பல்வேறு கோயில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் என அவருக்காக சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர்.

இந்த பிரார்த்தனையில் மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம் மற்றும் பண்ருட்டி பகுதியைச் சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைய தேமுதிக நிர்வாகிகள் தர்காவில் பிரார்த்தனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.