கடலூர் : சிதம்பரத்தில் உலகப் புகழ் பெற்ற நடராஜர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆருத்ரா தரிசனம் கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில், இன்று முக்கிய திருவிழாவான தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், விநாயகர், முருகர், சண்டீஸ்வரர், நடராஜர் ஆகியோர் தனித்தனி தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளில் தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக பெண்கள் வீதிகளில் கோலமிட்டு சுவாமியை வரவேற்றனர். இதேபோன்று சிவ பக்தர்கள், சிவ வாத்தியங்கள் வழங்கி நடனமாடி சுவாமியை தரிசனம் செய்தனர்.
முக்கிய திருவிழாவான ஆருத்ரா தரிசனம் நாளை(டிச.20) பிற்பகல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாளை கடலூர் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேர் திருவிழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தரிசனத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்கள் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சிதம்பரம் வந்துள்ளனர்.
இதையும் படிங்க : சிதம்பரம் நடராஜர் கோயிலின் தேரோட்டத்திற்கு பக்தர்கள் அனுமதி