காவல் உதவி ஆயவாளர் வில்சன் கொலை வழக்கில் கைதான ஷமீம், தவுபிக் இருவரும் பாத்திமா வீட்டில் தங்கி இருந்ததாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் கடலூர் மாவட்டம் நெய்வேலி, பரங்கிப்பேட்டை, கொள்ளுமேடு, மேல்பட்டாம்பாக்கம் ஆகிய இடங்களில் என்ஐஏ அலுவலர்கள் 12 பேர் கொண்ட குழு 3 பிரிவுகளாகப் பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.
இதில், பரங்கிப்பேட்டை அப்துல் ஹமீது, மேல்பட்டாம்பாக்கம் ஜாபர் அலி, நெய்வேலி இந்திராகாந்தி, கொள்ளுமேடு காஜா மொய்தீன் ஆகியோரது வீடுகளில் என்ஐஏ அலுவலர்கள் காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதில், மேல்பட்டாம்பாக்கம் ஜாபர் அலி வீட்டில் 3 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் வீட்டில் இருந்து லேப்டாப், ஹார்ட் டிரைவ், உள்ளிட்ட ஆவணங்களும், கொள்ளுமேடு காஜாமொய்தீன் என்பவரின் உறவினரான நெய்வேலி இந்திராகாந்தி என்பவரது வீட்டிலிருந்து தொலைபேசி உள்ளிட்ட ஆவணங்களைக் கைப்பற்றி கொண்டு விசாரணையை முடித்துவிட்டு சென்றனர்.
இதையும் படிங்க: சிகரம் தொட்ட சிறுமிக்கு நரேந்திர மோடி வாழ்த்து