ETV Bharat / state

மணல் கொள்ளையால் ரயில் பாலம் இடியும் அபாயம்

கடலூர்: கெடிலம் ஆற்றில் நடக்கும் மணல் கொள்ளையால், ஆற்றின் ரயில் பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர்.

Sand Mafia
author img

By

Published : Jul 12, 2019, 11:15 PM IST

கடலூரில் தென்பெண்ணை மற்றும் கெடிலம் என இரண்டு பெரிய முக்கிய ஆறுகள் உள்ளது. அந்த ஆறுகளின் பாலத்தின் அடியில் மணல் கொள்ளை இரவு நேரங்களில் நடைபெறுகிறது. இதனைத் தடுத்திட மாவட்ட காவல்துறை சார்பில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ள போதிலும் மணல் திருட்டினை தடுக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். சில இடங்களில் காவலர்களின் ஒத்துழைப்போடும் இத்திருட்டு நடைபெற்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்

இந்நிலையில் கடலூர்-விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் கடலூர் அருகே பாதிரிக்குப்பத்தையும் கோண்டூரையும் இணைக்கும் வகையில் கெடிலம் ஆற்றில் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

26 தூண்கள் கொண்ட இந்த ரயில் பாலத்தின் கீழே ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால், தூண்களின் அருகே மணல் அள்ளப்படுகிறது. அங்கு சுரங்கம் போல் பாதை அமைத்து ரயில் பாலத்தின் அஸ்திவாரம் வரையில் தோண்டியெடுத்து வருகின்றனர். திருடப்பட்ட ஒரு மூட்டை மணல் ரூ. 100 வரையில் விற்பனையாவதால் இத்தொழிலில் பலர் கூட்டாக இணைந்து செய்து வருகின்றனர்.

தற்போது பாலத்தின் அஸ்திவாரங்கள் முழுமையாக வெளியேத் தெரியும் அளவிற்கு மணல் அள்ளப்பட்டுள்ளதால் வரும் மழைக்காலத்தில் வெள்ளம் வந்தால் கண்டிப்பாக பாலத்திற்கு சேதம் ஏற்படும். ஏனெனில், இப்பாலம் அமைந்துள்ள பகுதியில் ஆற்றின் போக்கானது ஆங்கில எழுத்தான எஸ் வடிவில் உள்ளது. இதனால், பாலத்தின் கீழே அதிகமான நீர் வேகமாக சுழுலுடன் ஏற்படும். இந்த பாலத்தில் ஒரு நாளைக்கு சுமார் 20க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஜெ.ராஜேஷ்கண்ணன் கூறுகையில், "ரயில் பாலத்தை காப்பாற்றி, கொள்ளையைத் தடுப்பதோடு, பாலத்தின் அஸ்திவாரத்தையும் பலப்படுத்த வேண்டும். மணல் கொள்ளையர்கள் மீது பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மணல் கொள்ளையை தடுக்கவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

கடலூர்-விழுப்புரம் ஆற்றின் ரயில் பாலம்

Intro:கடலூரில் பாலங்கள் கீழே தொடரும் மணல் கொள்ளை -
மணல் கொள்ளையால் ரயில் பாலம் இடியும் அபாயம்
அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?Body:கடலூர்
ஜீலை 12,
கடலூரில் 2 பெரிய முக்கிய ஆறுகள் உள்ளது இதில் தெண்பெண்ணனை மற்றும் கெடிலம் ஆகிய ஆறுகளில் உள்ள பாலத்தின் அடியில் மணல் கொள்ளை இரவு நேரங்களில் நடைபெறுகிறது

தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாகவும் மேலும் கட்டுமானப் பணிக்கான அத்தியாவசிய தேவையான மணல் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மணல் உள்ள பகுதிகளில் தலைச்சுமையாகவும், இரண்டு சக்கர வாகனம், மாட்டு வண்டிகள், வாகனங்களிலும் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது.
இதனைத் தடுத்திட மாவட்ட காவல்துறை சார்பில் தனிப்பிரிவு துவங்கப்பட்டுள்ள போதிலும் மணல் திருட்டினை தடுக்க முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். சில இடங்களில் காவல்துறையினரின் ஒத்துழைப்போடும் இத்திருட்டு நடைபெற்று வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இந்நிலையில், கடலூர் நகருக்குள் பாயும் கெடிலம் ஆற்றில் எவ்வித சத்தமும் இல்லாமல் நடைபெற்று வரும் மணல் திருட்டினால் ரயில் பாலம் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடலூர்-விழுப்புரம் ரயில் மார்க்கத்தில் கடலூர் அருகே பாதிரிக்குப்பத்தையும் கோண்டூரையும் இணைக்கும் வகையில் கெடிலம் ஆற்றில் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாலத்தின் கீழே சுமார் 26 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஆற்றில் தண்ணீர் இல்லாத காரணத்தால் தூண்களின் அருகே மணல் கொள்ளையர்கள் மணல் அள்ளி வருகின்றனர். குறிப்பாக, சுரங்கம் போல் பாதை அமைத்து ரயில் பாலத்தின் அஸ்திவாரம் வரையில் தோண்டியெடுத்து வருகின்றனர். சாக்கு மூட்டைகளில் மணல் அள்ளி அதனை இருசக்கர வாகனங்களில் தங்களின் பகுதிகளுக்கு எடுத்துச் சென்று அதனை விற்பனை செய்து வருகின்றனர். ஒரு மூட்டை மணல் ரூ.100 வரையில் விற்பனையாவதால் இத்தொழிலில் பலர் கூட்டாக இணைந்து செயலாற்றி வருகின்றனர்.

கடலூர் நகரப்பகுதிக்குள் அமைந்திருந்தபோதிலும் இதுதொடர்பாக காவல்துறையினருக்கு எந்தவிதமான துப்பும் கிடைக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

தற்போது பாலத்தின் அஸ்திவாரங்கள் முழுமையாக வெளியேத் தெரியும் அளவிற்கு மணல் அள்ளப்பட்டுள்ளதால் வரும் மழைக்காலத்தில் வெள்ளம் வந்தால் கண்டிப்பாக பாலத்திற்கு சேதம் ஏற்படும். ஏனெனில், இப்பாலம் அமைந்துள்ள பகுதியில் ஆற்றின் போக்கானது ஆங்கில எழுத்தான எஸ் வடிவில் உள்ளது. இதனால், பாலத்தின் கீழே அதிகமான நீர் வேகமாக சுழுலுடன் ஏற்படும். தற்போது, மணல் எடுக்கப்பட்டு அஸ்திவாரம் வெளியேத் தெரியும் நிலை உள்ளதால் வெள்ளத்தின் போது அஸ்திவாரம் அடியோடு அடித்துச் செல்லப்படும் நிலையும் ஏற்படலாம். இந்த ரயில் பாதை வழியாக ஒரு நாளைக்கு சுமார் 20க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஜெ.ராஜேஷ்கண்ணன் கூறுகையில், ரயில் பாலத்தை காப்பாற்றும் பொருட்டு மணல் கொள்ளையைத் தடுப்பதோடு, பாலத்தின் அஸ்திவாரத்தையும் பலப்படுத்த வேண்டும். மணல் கொள்ளையர்கள் மீது பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த மணல் கொள்ளையை தடுக்காவில்லை என்றால் மக்களை திரட்டி போராட்டத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளோம் என்றார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.