கடலூர்: பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (நவ.25) நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், "10.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. சிறப்பான வழக்கறிஞர்களை நியமனம் செய்துள்ளது. எனவே, தடை உத்தரவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
பாமக வெற்றி பெற கட்சியினர் சபதம்
வரும் தேர்தலில் பாமக வெற்றி பெற கட்சியினர் சபதம் ஏற்க வேண்டும். இதற்காக சமூக வலைதளங்களை அதிகமாக பயன்படுத்தி மக்களிடையே செல்ல வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: 14 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை