ETV Bharat / state

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படக்கூடாது- ராஜகண்ணப்பன் - இரட்டை இலை

கடலூர்: தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படக்கூடாது. காவல்துறையின் வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன்
author img

By

Published : Apr 6, 2019, 10:49 AM IST

Updated : Apr 6, 2019, 5:46 PM IST

கடலூரில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், திமுக வேட்பாளர் டிஆர்விஎஸ் ரமேஷுக்கு ஆதரவு தெரிவித்து செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினார். இதில் திமுகவின் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "பாஜகவின் கொத்தடிமைகளாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் மாறிவிட்ட காரணமாக, பாஜக கேட்ட இடங்களை எல்லாம் அதிமுக தென் மாவட்டத்தில் ஒதுக்கிக் கொடுத்துள்ளது. அதன் காரணமாக பாரதிய ஜனதா கட்சி சொல்வதைக் கேட்டுக்கொண்டு அம்மாவையும், எம்ஜிஆரையும் மறந்து விட்டு இரட்டை இலை சின்னத்தையும், கோடியும் வைத்துகொண்டு கட்சி நடத்தி வருகின்றனர்.

மக்களவை தேர்தலில் 40 உறுப்பினர்கள் சென்றால்தான் தமிழ்நாட்டுக்கு மரியாதை. தமிழ்நாட்டில் உள்ள பிரச்னைகளை தீர்க்க திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற அணி வெற்றி பெற வேண்டும்.

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவது என்பது என்னுடைய குற்றச்சாட்டு. துரைமுருகன் வீட்டில் சோதனையிட்ட வருமானவரித்துறையினர் ஏன் ஏ.சி.சண்முகம் வீட்டில் சோதனை நடத்தவில்லை. தற்போது காவல்துறையினர் வாகனத்தில் பணம் செல்வதாக புகார் வந்துள்ளது. தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்படாமல் நேர்மையாக நடக்க வேண்டும்" என்றார்.

Intro:தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படக்கூடாது காவல்துறை வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் கடலூரில் பேட்டி

Body:கடலூர்
ஏப்ரல் 5,

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படக் கூடாது என முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கடலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு திமுக வேட்பாளர் டி .ஆர் .வி.எஸ் ரமேஷ் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கடலூரில் முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினார். இதில் திமுகவின் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்;இந்த தேர்தலில் மதசார்பற்ற கூட்டணி தமிழ்நாடு பொருத்தமட்டில் எப்பவுமே அப்படிதான் நடக்கும் பிஜேபி யின் உடைய கொத்தடிமைகளாக இபிஎஸ் ஓபிஎஸ் மாறிவிட்ட காரணமாக கேட்ட மாவட்டங்களை எல்லாம் தென் மாவட்டத்தில் ஒதுக்கிக் கொடுத்து அதன் காரணமாக பாரதிய ஜனதா கட்சி சொல்வதைக் கேட்டுக்கொண்டு அம்மாவையும் எம்ஜிஆரையும் மறந்து விட்ட காரணத்தினாலும் இரட்டை இலை சின்னத்தையும் கோடியும் வச்சுக்கிட்டு கட்சி நடத்துகிற பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இந்த கட்சியில் சம்பந்தமே இல்ல எனக்கு கேள்வி கேட்பதற்கு உரிமை உண்டு.

தேர்தலில் பதவி நிலைப்பதற்காக பிஜேபிக்கு அவர்கள் ஆதரவு கொடுக்கிறார்கள் நாடாளுமன்றத் தேர்தலில் 40 உறுப்பினர்கள் சென்றால் தான் தமிழ்நாட்டுக்கு மரியாதை இங்கு பல பிரச்சனைகள் இருக்கு மத்தியிலும் சரி அண்டை மாநிலங்களில் சரி அதை சரி செய்ய வேண்டும் அதற்கு திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற அணிக்கு நாடாளுமன்றத்தில் இடம் பிடிக்க வேண்டும் பிஜேபி ஆதரவு அளிக்கும் அவர்கள் வெற்றி பெற செய்யக்கூடாது திமுக தலைமையிலான அணி வெற்றி பெற வேண்டும்.

தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவது என்பது என்னுடைய குற்றச்சாட்டு துரைமுருகன் வீட்டில் சோதனையிட்ட வருமானவரித்துறையினர் ஏன் ஏசி சண்முகம் வீட்டில் சோதனை நடத்த வில்லை தற்போது போலீஸ் வாகனத்தில் பணம் செல்வதாக புகார் வந்துள்ளது தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு அது ஒரு சுதந்திரமான அமைப்பு பாகுபாடற்ற நேர்மையாக நடக்க வேண்டும் என்றார்.

Conclusion:
Last Updated : Apr 6, 2019, 5:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.