ETV Bharat / state

குளம்போல் தேங்கிய மழைநீர்: திருப்பாதிரிப்புலியூர் குடியிருப்புவாசிகள் அவதி! - திருப்பாதிரிப்புலியூர் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர்

கடலூர்: குடியிருப்புப் பகுதிகளில் குளம்போல் தேங்கிய மழைநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

rain water deceased problem in cuddalore
author img

By

Published : Nov 6, 2019, 8:21 AM IST

கடலூர் நகராட்சிக்குள்பட்ட திருப்பாதிரிப்புலியூரின் குமரன் நகர், சரவணா நகர் பகுதிகளில் பெய்த கனமழையால் அப்பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. மேலும் சமீபத்தில் அப்பகுதியில் இணைப்புச் சாலை போடப்பட்டதால் அப்பகுதி உயரமாகவும் குடியிருப்புப் பகுதி பள்ளமாகவும் மாறிவிட்டது. இதனால் அங்கு மழைநீர் வடிவதற்கும் வழியில்லாமல் தேங்கி நிற்கிறது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் வழிந்தோடும் சாக்கடை நீர் தேங்கி நிற்கும் மழைநீரில் கலப்பதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகமாக துர்நாற்றம் வீசுவதால் அங்கு தங்கியிருக்கும் பள்ளிக் குழந்தைகள், முதியவர்களுக்கு எளிதில் நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வீட்டைவிட்டு வெளியேற இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவும் நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்ல முடியவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

தேங்கிய மழைநீரால் அவதியுறும் கடலூர் குடியிருப்புவாசிகள்

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கூறியபோது, குடியிருப்புப் பகுதிகளில் ஓடிய கழிவுநீரை மட்டும் தற்காலிகமாகச் சரி செய்துவிட்டு சென்றுவிட்டனர் என்றும் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து தேங்கி நிற்கும் மழைநீரை சரிசெய்யவில்லை எனவும் அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர். நகராட்சி ஆணையர் நேரடியாக பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: கடலூரில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்!

Intro:குடியிருப்புப் பகுதிக்குள் குளம்போல் தேங்கிய மழைநீர் நோய் பரவும் அபாயம்
Body:கடலூர்
நவம்பர் 5,

கடலூரில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குடியிருப்புவாசிகள் தெரிவிக்கின்றனர்.

கடலூர் நகராட்சிக்கு உட்பட்ட திருப்பாதிரிப்புலியூர் வார்டு 29ல் அடங்கிய குமரன் நகர் சரவணா நகர் பகுதிகளில் பெய்த கனமழையால் அப் பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது மேலும் சமீபத்தில் அப்பகுதியில் இணைப்புச் சாலையை போடப்பட்டதால் அப்பகுதி உயரமாகவும் குடியிருப்பு பகுதி பள்ளமாகவும் மாறிவிட்டது இதனால் அங்கு தேங்கிய மழை நீர் வடிவதற்கு வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. மேலும் அப்பகுதியில் வழிந்தோடும் சாக்கடை நீர் தேங்கி நிற்கும் மழைநீரில் கலப்பதனால் அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் அங்கு தங்கியிருக்கும் பள்ளி குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எளிதில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்ட வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். இதன் காரணமாக பள்ளி கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் வீட்டை விட்டு வெளியேற இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மேலும் நோயாளிகள் மருத்துவமனைக்கு செல்ல முடியாநிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கூறிய போது குடியிருப்பு பகுதிகளில் ஓடிய கழிவுநீரை மட்டும் தற்காலியமாக சரி செய்துவிட்டு சென்றுவிட்டனர். பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து தேங்கி நிற்கும் மழை நீர் சரிசெய்யப்படவில்லை இதற்கு நகராட்சி ஆணையர் நேரடியாக பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.