கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் உள்ள நகைக் கடைக்கு வந்த இரண்டு பெண்கள், நகைகள் வாங்குவதுபோல் நடித்து ஒவ்வொரு மாடலாக எடுத்துக்காட்ட சொல்லியுள்ளனர்.
இதனால் ஊழியரும் நகையை எடுத்துகாட்டியுள்ளார். அப்போது மற்றொரு நகையை எடுத்துக்காட்ட சொல்லி ஊழியரை திசைதிருப்பியுள்ளனர். அதனையடுத்து, தங்க நகையை எடுத்துகொண்டு, அவர்கள் வைத்திருந்த கவரிங் நகையை மாற்றி வைத்துள்ளனர்.
இதுகுறித்து, தேவநாதன் கொடுத்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். அப்போது நகைக் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபின் செல்வி,ரத்னா என இரண்டு பெண்களை கைது செய்தனர்.