ETV Bharat / state

என்எல்சியை தனியார் மயமாக்க முயற்சி - அன்புமணி ராமதாஸ் - nlc

நெய்வேலியில் பேசிய அன்புமணி ராமதாஸ் 2025ஆம் ஆண்டில் என்எல்சி தனியார் மையமாக மாறும் என தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 7, 2023, 10:46 PM IST

செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ்

கடலூர்: என்எல்சிக்காக வீடு நிலம் கொடுத்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், கடலூர் மாவட்டத்தில் என்எல்சி சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு நாள் நடைப்பயணம் மேற்கொண்டார். நடைப் பயணத்திற்கு நடுவே நெய்வேலி அருகே உள்ள வானதி ராயபுரம் தென்குத்து பகுதியில் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர் அங்கு கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, “இந்த பகுதியில் 49 கிராமங்களிலிருந்து 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களை என்.எல்.சி. இந்தியா நிர்வாகம் கையகப்படுத்த முயற்சி செய்து வருகிறது. இது பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத் தான் 2நாட்கள் நடைப்பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். என்.எல்.சி. நிர்வாகம் 66 ஆண்டுகளுக்கு முன்பு நம் மக்களிடம் 37 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களைக் கையகப்படுத்தி எடுத்துக் கொண்டது. இது வரை யாருக்கும் பட்டா வழங்கவில்லை.

வேலைவாய்ப்பும் வழங்கவில்லை. ஆரம்பக் காலத்தில் ஏதோ 1800 பேருக்கு வேலை வழங்கியது. அவர்களும் தற்போது பணி ஓய்வு பெற்று விட்டனர். நான் இங்கு தேர்தல் பிரசாரத்திற்காக வரவில்லை. உங்களிடம் ஓட்டு கேட்கவில்லை. இந்த மண்ணின் மக்களுக்காக, குடிநீருக்காக, விவசாயத்தைக் காப்பதற்காக வந்திருக்கிறேன். கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே 10 அடியில் தண்ணீர் கிடைத்தது.

உலகளவில் ஆஸ்திரேலியாவுக்குப் பிறகு நெய்வேலியில் தான் தண்ணீரூற்று அதிக அளவிலிருந்தது. ஆனால் இப்போது 1000 அடிக்கு கீழே தான் தண்ணீர் உள்ளது. ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரை உறிஞ்சி எடுக்கிறார்கள். ஒரு ஏக்கர் நிலத்தில் ரூ.10 லட்சம் ஆண்டு வருமானம் கிடைக்கும். ஆனால் இப்போது அது கிடைக்காது. என்.எல்.சி. நிர்வாகத்துக்கு நிலத்தை பிடுங்கிக் கொடுக்க 2 அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உடந்தையாகச் செயல்பட்டு வருகிறார்கள். விவசாயத்தைப் பாதுகாக்கக் கூடிய அமைச்சர் அதற்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார்.

மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குவோம் என்று என்.எல்.சி.க்கு நிலத்தைப் பிடுங்கிக் கொடுக்க துடிக்கிறார். 2 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க போகிறார்கள். இதை மத்திய அரசை நாடாளுமன்றத்தில் சொல்லி இருக்கிறது. என்.எல்.சி. நிர்வாகத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்காகத் தான் இந்த 25 ஆயிரம் ஏக்கரை நிலங்களைப் பறிக்க முயற்சி செய்கிறார்கள். ஏற்கனவே 1987-ம் ஆண்டு கையகப்படுத்திய 10 ஆயிரம் ஏக்கர் நிலம் அப்படியே உள்ளது.

இதிலிருந்து இன்னும் 40 ஆண்டுகளுக்கு நிலக்கரி எடுக்க முடியும். அதை விட்டு தற்போது 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த முயற்சி செய்கிறார்கள் . இந்த நிலத்தைக் கட்டுப்படுத்திப் பிரபலமான தனியார் நிறுவனத்தின் ஒப்படைக்க முயற்சி நடக்கிறது. இதனால் இப்போது ஏக்கருக்கு 25 லட்சம் இழப்பீடு தருவதாகவும், 500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாகவும் மாவட்ட நிர்வாகமும், அமைச்சரும் கூறி வருகிறார்கள்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு தனியாரிடம் ஒப்படைக்கப் போகும் என்.எல்.சி. நிர்வாகத்திடம் இருந்து எப்படி வேலைவாய்ப்பைக் கொடுக்க முடியும். அந்த தனியார் நிறுவனத்திற்கு புரோக்கர் ஆக மாவட்ட நிர்வாகமும், அமைச்சர்களும் செயல்பட்டு வருகிறார்கள். என்.எல்.சி. நிறுவனத்திற்கு ஒரு பிடி மண்ணை கூட விட்டுத் தர மாட்டோம். என்.எல்.சி.க்கு நிலத்தை கொடுக்காவிட்டால் தமிழகம் இருண்டு விடும் என்று ஏமாற்றி வருகிறார்கள்.

தமிழ்நாட்டிற்கு ஒட்டுமொத்தமாக 18 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் என்.எல்.சி. நிர்வாகம் 2000 மெகாவாட் மின்சாரத்தைத் தான் உற்பத்தி செய்கிறது. அதிலிருந்து நமக்கு 40 சதவீதமாக 800 மெகாவாட் மின்சாரம் தான் தருகிறது. இப்படி இருக்கும்போது எப்படி தமிழகம் இருண்டதாக மாறும். ஆகவே ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது. இது 49 கிராம பிரச்சினைகள் மட்டும் கிடையாது. ஒட்டுமொத்த கடலூர் மாவட்ட மக்களின் பிரச்சினை. என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்தால் குடிக்க தண்ணீர் கூட கிடைக்காது. விவசாயம் செய்ய இயலாது.

என்.எல்.சி. நிர்வாகம் ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது .அதில் ஆண்டுக்கு 2400 கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது. 66 ஆண்டுகளாக என்.எல்.சி. நிர்வாகம் மக்களை ஏமாற்றி வருகிறது. இனியும் மக்கள் ஏமாற மாட்டார்கள். இங்குள்ள அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகம், தமிழக முதல்-அமைச்சர், மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் ஆகியோர் இந்த என்.எல்.சி. நிர்வாகத்தை தனியாருக்கு விற்பனை செய்ய மாட்டோம் என்று எழுதிக் கொடுக்க முடியுமா? தமிழக அரசு எதற்கெடுத்தாலும் மத்திய அரசை எதிர்த்து வருகிறது.

மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து வருகிறது. என்.எல்.சி.யும் மத்திய அரசு நிறுவனம் தான். ஆனால் இதற்கு மட்டும் மத்திய அரசுக்கு உடந்தையாக செயல்படுவது ஏன்? தனியார் நிறுவனம் என்.எல்.சி.யை எடுத்த பிறகு நிலத்தை கையகப்படுத்த முடியாது. அதற்காகத்தான் இது. சமீபத்தில் என். எல்.சி. நிர்வாகம் 299 பொறியாளர்களை வேலைக்கு எடுத்தது. ஆனால் இதில் கடலூர் மாவட்டத்தில் மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவர் கூட வேலை வாய்ப்பு பெறவில்லை.

பிறகு எதற்காக இந்த நிறுவனத்தை நடத்துகிறீர்கள். ஆகவே நிலத்திற்கு ரூ. 25 லட்சம் அல்ல. ரூ.1 கோடி கொடுத்தாலும் இந்த மண்ணை விட்டு தர மாட்டோம். ஒரு பிடி மண்ணை கூட எடுக்க முடியாது. பரங்கிப்பேட்டைக்கு சைமா தொழிற்சாலை வர போகிறது. அதையும் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் உணர்வு பூர்வமாக போராட்டம் நடத்துகிறோம். கோவை மாவட்டம் அல்லூரில் தொழில் பூங்கா தொடங்க 3,500 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப் போகிறார்கள். அதில் 2000 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தமானது. 1500 ஏக்கர் தனியார் நிலம் என்று சொல்கிறார்கள்.

அந்த தனியார் நிலத்தைத் தமிழக அரசு கையகப்படுத்தக் கூடாது என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ,எடப்பாடி பழனிசாமி , முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் போராட்டம் நடத்துகின்றனர். மற்ற கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் கடலூர் மாவட்டத்தில் இப்பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த யாராவது வந்து குரல் கொடுத்தார்களா? தமிழகத்தில் எத்தனை விவசாய சங்கங்கள் உள்ளது. அவர்கள் வந்தார்களா ? ஓட்டுக்கு மட்டும் வருவார்கள். மக்கள் பிரச்சினைக்காக வர மாட்டார்கள். பாமக மட்டும் போராடுகிறது. இதை என்.எல்.சி. பிரச்சினையாகப் பார்க்க கூடாது. மக்களின் வாழ்வாதார பிரச்னை.

தாது அறக்கட்டளை , இந்த என்.எல்.சி.யால் ஒட்டு மொத்த மாவட்டமும் பாதிக்கப்பட்டதாக அறிவித்துள்ளது. இதற்காகத்தான் உங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். என்.எல்.சி. நிர்வாகம் இங்குள்ள லாபத்தைக் கொண்டு ரூ.55 ஆயிரம் கோடியை ஒடிசா ,உத்தர பிரதேசம், ஜார்கண்ட், பீகார், ராஜஸ்தான் போன்ற வெளி மாநிலங்களில் முதலீடு செய்கிறது. ஆனால் நாம் அவர்களிடம் வேலை கொடு, வேலை கொடு என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். அடிமைத்தனமாக இருக்கிறோம். ஆகவே தமிழகத்துக்கு என்.எல்.சி .நிர்வாகம் வேண்டாம். வெளியேற வேண்டும். நிலம் எடுக்கும் முடிவை கைவிட வேண்டும். நிச்சயம் முடியாது. ராணுவமே வந்தாலும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.இந்த போராட்டத்திற்கு ஒட்டுமொத்த மக்களும் ஆதரவு தர வேண்டும்” என பேசினார்.

இதையும் படிங்க: தாய்மொழிகள் தான் முக்கியம்; மொழி திணிப்பு கூடாது - வெங்கையா நாயுடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.